• Mar 29 2024

கனவில் பல்லி வருவது கெட்ட சகுனத்திற்கான அறிகுறியா?

Sharmi / Dec 14th 2022, 11:23 pm
image

Advertisement

நாம் தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாகும். இவ்வாறான கனவுகள் சில நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்பது அவரவர் வாழ்வினில் நடக்கும் சம்பவத்தின் அனுபவத்தில் அடிப்படையில் தெரிந்து கொள்வார்கள்.

சுவர்களில் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகள் மனிதர்கள் மீது விழுந்து விட்டால் அது விழும் இடத்தினை பொறுத்து பலன்கள் காணப்படுகின்றது. 

மனித உடம்பில் சில உறுப்புகளில் விழுந்தால் அது அசுபபலன்களை அளிக்கும். மேலும் வீட்டில் நல்ல காரியங்கள் பேசும் போது பல்லியின் சத்தம் கேட்டால் அது நல்ல சகுணமாகவே பார்க்கப்படுகின்றது.

சாஸ்திரங்களிலும் முக்கியமாக பார்க்கப்படும் பல்லியை, பார்த்தால் பலரும் முகம் சுழிக்க செய்வார்கள். அதுவே, கனவில் இவ்வாறான பல்லிகளை நாம் அவதானித்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

தூங்கும் போது சுவற்றில் பல்லி ஓடுவது போன்று கனவு கண்டால், எதிர்வரும் நாட்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டுமாம். எதிரிகளால் ஏற்படும் பிரச்சினையை முன்கூட்டியே அறிவிக்கவே இவ்வாறு கனவில் பல்லி வருவதாக கூறப்படுகின்றது.

அதே போன்று கனவில் பல்லி பூச்சிகளை உண்ணுவது போன்று பார்த்தால், வாழ்வில் பெரிய இழப்பு ஏற்படவுள்ளதாக பொருளாகும். அதே போன்று குட்டி பல்லியை அவதானித்தால் நாம் பார்க்கும் வேலையில் பிரச்சினை எழுமாம்.

உங்கள் கனவில் ஒரு பல்லி வீட்டிற்குள் நுழைவதை கண்டால், பாரிய பிரச்சினையை சிக்குவதையே காட்டுகின்றதாம். ஆனால் பல்லியை கொல்வதாக கனவு வந்தால், கஷ்டங்கள் நீங்கி நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.

ஒரு பல்லியை மற்றொரு பல்லி சாப்பிடுவது போன்று கனவு கண்டால், பண வரவு வரப்போகின்றது என்று அர்த்தமாம்.

கனவில் பல்லி வருவது கெட்ட சகுனத்திற்கான அறிகுறியா நாம் தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாகும். இவ்வாறான கனவுகள் சில நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்பது அவரவர் வாழ்வினில் நடக்கும் சம்பவத்தின் அனுபவத்தில் அடிப்படையில் தெரிந்து கொள்வார்கள்.சுவர்களில் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகள் மனிதர்கள் மீது விழுந்து விட்டால் அது விழும் இடத்தினை பொறுத்து பலன்கள் காணப்படுகின்றது. மனித உடம்பில் சில உறுப்புகளில் விழுந்தால் அது அசுபபலன்களை அளிக்கும். மேலும் வீட்டில் நல்ல காரியங்கள் பேசும் போது பல்லியின் சத்தம் கேட்டால் அது நல்ல சகுணமாகவே பார்க்கப்படுகின்றது.சாஸ்திரங்களிலும் முக்கியமாக பார்க்கப்படும் பல்லியை, பார்த்தால் பலரும் முகம் சுழிக்க செய்வார்கள். அதுவே, கனவில் இவ்வாறான பல்லிகளை நாம் அவதானித்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை அறிந்து  கொள்ளலாம்.தூங்கும் போது சுவற்றில் பல்லி ஓடுவது போன்று கனவு கண்டால், எதிர்வரும் நாட்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டுமாம். எதிரிகளால் ஏற்படும் பிரச்சினையை முன்கூட்டியே அறிவிக்கவே இவ்வாறு கனவில் பல்லி வருவதாக கூறப்படுகின்றது.அதே போன்று கனவில் பல்லி பூச்சிகளை உண்ணுவது போன்று பார்த்தால், வாழ்வில் பெரிய இழப்பு ஏற்படவுள்ளதாக பொருளாகும். அதே போன்று குட்டி பல்லியை அவதானித்தால் நாம் பார்க்கும் வேலையில் பிரச்சினை எழுமாம்.உங்கள் கனவில் ஒரு பல்லி வீட்டிற்குள் நுழைவதை கண்டால், பாரிய பிரச்சினையை சிக்குவதையே காட்டுகின்றதாம். ஆனால் பல்லியை கொல்வதாக கனவு வந்தால், கஷ்டங்கள் நீங்கி நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.ஒரு பல்லியை மற்றொரு பல்லி சாப்பிடுவது போன்று கனவு கண்டால், பண வரவு வரப்போகின்றது என்று அர்த்தமாம்.

Advertisement

Advertisement

Advertisement