ரவி சாஸ்திரி பதவி விலகுகிறாரா?

239

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, ரவி சாஸ்திரி விலக உள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரை அடுத்து, தமது ஒப்பந்தக் காலம் நிறைவடைவதுடன், ரவி சாஸ்திரி பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சில அதிகாரிகளுக்கு ரவி சாஸ்திரி அறியப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்திய கிரிக்கட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீரீதர் மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும், டி20 உலகக் கிண்ண தொடரின் பின்னர் பதவி விலக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேநேரம், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் புதிய குழு ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அண்மையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்குமாறு சிலர் பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: