• Apr 23 2024

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது தேர்தல்? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 10:56 am
image

Advertisement

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது தேர்தல் நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு SamugamMedia தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement