• Apr 16 2024

பப்பாசி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா? SamugamMedia

Tamil nila / Mar 23rd 2023, 8:52 pm
image

Advertisement

பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது. சரி வாருங்கள் பப்பாளி பழத்தில் வேறு என்னென்ன நன்மைகள் மறைந்துள்ளது என்று காண்போம்.


1. பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.


2.இன்று பலருக்கும் இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை/நீரிழிவு தான். இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.


3.செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை தரும் ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சமீபகாலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. 


இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


4.பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.


5. பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

பப்பாசி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா SamugamMedia பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது. சரி வாருங்கள் பப்பாளி பழத்தில் வேறு என்னென்ன நன்மைகள் மறைந்துள்ளது என்று காண்போம்.1. பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.2.இன்று பலருக்கும் இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை/நீரிழிவு தான். இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.3.செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை தரும் ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சமீபகாலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.4.பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.5. பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement