வானத்தில பறக்கிற விமானத்தில கோடு மாதிரி புகை வாறது இதுக்கா?

நாம் வானத்தில் பார்க்கும் விமானங்கள் இரட்டை கோடு போன்ற புகையை வெளியிட்ட படி செல்வதை அவதானித்து இருப்போம். அதனை நாம் வேடிக்கையாக பார்த்திருப்போம். இவ்வாறு புகை வெளியிடுவதற்கு பிராதான காரணங்கள் உள்ளன.

சாதாரணமான பயணிகள் விமானங்கள், குறிப்பிடளவு உயரமான தூரத்திலேயே பறக்கும். இந்த நிலையில் அதன் எஞ்சின் வெப்ப நிலைகள் சீராக பேணப்படும்.சில விமானங்கள் அதிக வேகத்தில் மிக உயரத்தில் பறக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு மிக உயரத்தில் விமானங்கள் பறக்கும் போது, வெப்பம் குறைவடைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். இதன் போது விமான எஞ்சின்கள் ,குளிர் காற்றை உள்ளே எடுத்து, சூடான காற்றை வெளிவிடும். இவ்வாறு சூடான காற்றும் குளிரான காற்றும் சந்திக்கும் போது அவை சேர்ந்து ஆவியாகும். அவ்வாறு ஆவியாகும் தோற்றப்பாடு எமது கண்களுக்கு புகை போன்று காட்சியளிக்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை