உங்களுடைய சன்ஸ்கிரீன் பாதுகாப்பானதா? ஆய்வு கூறும் அதிர்ச்சி

450

சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீன்கள், ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் வித்திடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என இது குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாம் பயன்படுத்துகின்ற சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றினால், அதிகமாக பயன்படுத்தும்போது திறம்பட செயல்படாது எனவும் புதிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வானது, போட்டோகெமிக்கல் மற்றும் போட்டோபயாலஜிக்கல் சயின்சஸ் (Photochemical and Photobiological Sciences) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனிநபர்கள் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என ஆய்வில் வெளியான தகவல்கள் வலியுறுத்தியுள்ளது.

ஜிங்க் ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீன்கள் பொதுவாக இரண்டு மணி நேரங்கள் மட்டுமே செயல்திறனுடையவையாக இருக்கும். அதற்கு மேல் பாதுகாப்பைக் கொடுக்காது.

ஆனால்இ ஜிங்க் தாதுடன் இருக்கும் ரசாயனங்கள் சூரிய ஒளியில் இணையும்போது கூடுதல் அபாயத்தை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சந்தையில் மார்கெட் செய்யப்படும் ஜிங்க் ஆக்சைடு சன்ஸ்கிரீம்கள் பாதுகாப்பானதாகவும், ரசாயனம் இல்லாதவை எனவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆனால், அவ்வாறு விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீம்களில் என்னென்ன கலவைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான ஆர்கானிக் சன்ஸ்கிரீன்கள் யுவி கதிர்வீச்சுகளை தடுப்பத்தில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சன்ஸ்கிரீன்கள் தொடர்பான ஆய்வுக்கு மருத்துவர் அரோரா கின்ஸ்பர்க் தலைமை தாங்கியுள்ளார். அவருடன் இணைந்து வேளாண் அறிவியல் பட்டதாரி டாங்குவே, லிசா ட்ரூங் மற்றும் கிளாடியா சாண்டிலன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் பொதுவாக பயன்படுத்தப்படும் பல்வேறு சன்ஸ்கிரீன்களை ஆய்வுக்குட்படுத்தியபோதுஇ அந்த கிரீம்கள் தோலில் இருக்கும் யுவி கதிர்வீச்சு தடுப்புகளை சிதைப்பதையும்இ மற்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதை கண்டறிந்தனர்.

ஜிங்க் ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீம்களை, மனித மரபணுக்களுடன் ஒத்துப்போகும் அம்சங்களை உடைய ஜீப்ரா மீன்களின் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, அந்த மீன்களின் விரும்பத் தகாத எதிர்வினைகள் உருவாவதைக் கண்டறிந்த நிலையில், குறித்த மீன்களில் ஏற்படும் எதிர்வினைகள் கண்டிப்பாக மனிதர்களுக்கும் ஏற்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஜிங்க் ஆக்சைடு கொண்ட மற்ற லோஷன்களையும் ஆய்வுக்குட்படுத்தி, புற ஊதா கதிர்வீச்சு சோதனையை மேற்கொண்ட முடிவில், ஜிங்க் ஆக்சைடு உள்ளிட்ட சன்ஸ்கிரீன்கள் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே பாதுகாப்பானது என்பதையும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ரசாயனங்களுடன் இணைந்து தீங்கு விளைவிக்கக்கூடியவையாக மாறுவதையும் கண்டுபிடிக்கப்பட்டது.

சருமத்திற்கு அதிக தீங்குவிளைவித்து புற ஊதா கதிர்வீச்சின் ஆபத்தையும், கொப்புளங்கள் உள்ளிட்ட பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.