Wednesday, May 18, 2022

வடகொரியாவில் தாண்டவமாடும் கொரோனா;தனிமைப்படுத்தலும் தீவிரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அடையாளம் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உலகலாவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் வடகொரியாவில் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை என அறிவித்தது.

இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று சீனாவில் மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியது. இந்நிலையில் சீன சுகாதார துறையும் உடனடியாக கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுடன் சில பகுதிகளை முற்றாக மூடியுள்ளதுடன் அங்கிருந்து எவரும் வெளியே செல்லமுடியாதவாறு வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் முதன்முறையாக முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளதுடன் தற்போது ஒரு கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வடகொரியாவில் திடீரென கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து வடகொரிய அரசு உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதேவேளை வடகொரியாவில் தற்போது 1,87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை