• Apr 24 2024

ரூ.1,100 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ!!

crownson / Dec 16th 2022, 12:22 pm
image

Advertisement

கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று மாநிலங்களவையில் இந்திய விண்வெளித்துறை மேம்பாடு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவியுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்வி மற்றும் ஜி.எஸ்.எல்வி-எம்.கே 3 செலுத்துவாகனம் மூலம் வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இந்த 177 வெளிநாட்டு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டதன் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்திய ரூபாயின் படி இதன் மதிப்பு ரூ.1,100 கோடி ஆகும்.

விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளம் வாயிலாக 111 விண்வெளி – ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

விண்வெளி நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனை மேம்படச் செய்வதற்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ரூ.1,100 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவையில் இந்திய விண்வெளித்துறை மேம்பாடு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.அதன்படி, ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்வி மற்றும் ஜி.எஸ்.எல்வி-எம்.கே 3 செலுத்துவாகனம் மூலம் வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.இந்த 177 வெளிநாட்டு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டதன் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரூபாயின் படி இதன் மதிப்பு ரூ.1,100 கோடி ஆகும். விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளம் வாயிலாக 111 விண்வெளி – ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.விண்வெளி நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனை மேம்படச் செய்வதற்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement