யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையினருக்கு!

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா நாளை(12) நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவ் விழாவில் வைத்து இவ் விருதும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘ யாழ்.விருது’ வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ்வாண்டு ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க, சமய குரவர்களின் பாடல் பெற்ற, சிவத்தலமான, திருக்கேதீச்சர ஆலய கும்பாபிஷேகப் பணிகளினை ஆற்றி ஈழத்தில் சைவ சமயம் மறுமலர்சியுற துணை செய்து இறைபணி புரிந்த திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை