• Sep 28 2024

Sharmi / Feb 11th 2023, 5:17 pm
image

Advertisement

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு இன்று மதியம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அதிகாரிகள்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் குறித்த கலாசார மையத்தில் இன்றையதினம் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இக்கலாசார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம்,கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம்,அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.













யாழ் கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு இன்று மதியம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அதிகாரிகள்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்நிலையில் குறித்த கலாசார மையத்தில் இன்றையதினம் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.இக்கலாசார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம்,கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம்,அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement