• Dec 01 2022

தேசிய மட்டத்தில் சாதித்த யாழ்ப்பாண வீராங்கனைகள்

harsha / 6 days ago
image

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை  மகாஜனாக் கல்லூரியின் 17 வயதுப் பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.
   
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று (24.11.2022) கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.

   இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா அணி  2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது. இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் போட்டு  வெற்றியை உறுதிப்படுத்தினார்.
    
இதேவேளை மகாஜனாக்கல்லூரியின்  20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ள நிலையில் நாளைய தினம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.