யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றையதினம் (29) பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.
குறித்த நடைபவனியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் நிறைவுற்றது.
இந்த பேரணியில் விரிவுரையாளர்கள், உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கே கோஹிலன் தலைமையில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றையதினம் (29) பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.
குறித்த நடைபவனியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் நிறைவுற்றது.
இந்த பேரணியில் விரிவுரையாளர்கள், உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கே கோஹிலன் தலைமையில் நடைபெறவுள்ளது.