• Sep 28 2024

யாழ் மாநகர சபை கட்டிடத்தை தொடர 600 மில்லியன் வழங்க ஒப்புதல்!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 11:38 am
image

Advertisement

இடைநிறுத்தப்பட்ட யாழ் மாநகர சபையின் புதிய கட்டிடத்தை தொடர தற்போதைய மாநகர முதல்வர் இ.ஆனல்ட் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 600 மில்லியனை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அழிவடைந்த கட்டிடத்தை புதிதாக அமைக்க 2250 மில்லியன் ரூபாவில் நல்லாட்சி அரசின் காலத்தில் அத்திவாரம் இடப்பட்டு 1050 மில்லியனிற்கான பணிகள் நிறைவடைந்திருந்த சமயம் நாட்டின் பொருளாதார நெருக்கடியினாலும் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாகவும் கட்டுமானம் முழுமையாக தடைப்பட்டது.

இதேநேரம் தறபோதைய சந்தை விலையில் எஞ்சிய பணியை முடிவுறுத்த மேலும் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை எனக் கணக்கிடப்பட்டதோடு எஞ்சிய பணியை மேற்கொள்ளாத நிலையில் கட்டிடத்தை மாநகர சபையிடம் கையளிக்க முற்பட்டனர்.

இதன் காரணமாக நகர மண்டப பணிக்காக எமது நிதி 250 மில்லியனை வழங்க 2022-05-27 ஆம் திகதிய மாதாந்த அமர்வில் அப்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் சபையிடம் அனுமதி கோரினார்.

இருந்தபோதும்,  நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்திற்கு  2022-01-27 அன்று சென்ற   தற்போதைய முதல்வர் இ.ஆனல்ட்  இதனை மத்திய அரசே முழுமையாக கட்டித்தர வேண்டிய கடப்பாட்டை  கோரியதன்  பெயரில் மத்திய அரசின் நிதியில் நகர மண்டபத்திற்கு மேலும் 600 மில்லியன் ரூபாவில் பணியை முன்கொண்டு செல்ல  நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்  ஜனாதிபதி செயலகத்திற்கு இணக்கத்தை எழுத்தில்  அறிவித்துள்ளார்.

இதனால் இந்தக் கட்டிடத்தை கட்டுமானம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு மாநகர சபையின் நிதியும் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாநகர சபை கட்டிடத்தை தொடர 600 மில்லியன் வழங்க ஒப்புதல்SamugamMedia இடைநிறுத்தப்பட்ட யாழ் மாநகர சபையின் புதிய கட்டிடத்தை தொடர தற்போதைய மாநகர முதல்வர் இ.ஆனல்ட் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 600 மில்லியனை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அழிவடைந்த கட்டிடத்தை புதிதாக அமைக்க 2250 மில்லியன் ரூபாவில் நல்லாட்சி அரசின் காலத்தில் அத்திவாரம் இடப்பட்டு 1050 மில்லியனிற்கான பணிகள் நிறைவடைந்திருந்த சமயம் நாட்டின் பொருளாதார நெருக்கடியினாலும் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாகவும் கட்டுமானம் முழுமையாக தடைப்பட்டது. இதேநேரம் தறபோதைய சந்தை விலையில் எஞ்சிய பணியை முடிவுறுத்த மேலும் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை எனக் கணக்கிடப்பட்டதோடு எஞ்சிய பணியை மேற்கொள்ளாத நிலையில் கட்டிடத்தை மாநகர சபையிடம் கையளிக்க முற்பட்டனர். இதன் காரணமாக நகர மண்டப பணிக்காக எமது நிதி 250 மில்லியனை வழங்க 2022-05-27 ஆம் திகதிய மாதாந்த அமர்வில் அப்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் சபையிடம் அனுமதி கோரினார். இருந்தபோதும்,  நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்திற்கு  2022-01-27 அன்று சென்ற   தற்போதைய முதல்வர் இ.ஆனல்ட்  இதனை மத்திய அரசே முழுமையாக கட்டித்தர வேண்டிய கடப்பாட்டை  கோரியதன்  பெயரில் மத்திய அரசின் நிதியில் நகர மண்டபத்திற்கு மேலும் 600 மில்லியன் ரூபாவில் பணியை முன்கொண்டு செல்ல  நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்  ஜனாதிபதி செயலகத்திற்கு இணக்கத்தை எழுத்தில்  அறிவித்துள்ளார். இதனால் இந்தக் கட்டிடத்தை கட்டுமானம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு மாநகர சபையின் நிதியும் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement