நெருக்கடி நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை; அவசர கோரிக்கை விடுப்பு!

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் பல்வேறு மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள பல மருத்துவமனைகளும் மருத்துவ சேவையினை மேற்கொள்வதில் கடும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரடியாக இரத்த வங்கிப் பிரிவிற்கு வருகை தந்து இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் A+ வகை குருதிக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும்இகொடையாளர்கள் இரத்ததானம் வழங்க முன்வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை குருதிக் கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை