இதுவரை அமைதியாக இருந்த ஜப்பான் இப்பேது தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
யப்பான் தனது கடல் எல்லைக்கருகில் 8க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் சீன போர்க் கப்பல்கள் காணப்படுவதை இந்த வாரத்தில் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நேற்று மாலை யப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த வார தொடக்கத்தில் இருந்து 5 ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணை தாங்கி போர்க் கப்பல்கள் யப்பானின் வடக்கு கடற்பகுதியான கொக் ஹெடோ மற்றும் தெற்கு கடற் பகுதியான ஒகினாவா பகுதியில் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளை இரண்டுக்கு மேற்பட்ட சீன போர்க் கப்பல்கள் லூசு தீவுக்கருகில் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யப்பான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
லூசு தீவு, யப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெறும் 500KM கடற் தூரமாக காணப்படுவதாகவும் யப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் பிரவுண்ஸ் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் ரஷ்யா மற்றும் சீனாவின் மேற்படி செயற்படானது யப்பானுக்கு கவலையளிப்பதாகவும் அமைதியற்ற சூழலை உருவாக்கும் செயற்பாடுகளாக மேற்படி போர்க் கப்பல்களின் வருகை காணப்படுவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சு இராணுவ ரீதியாக யப்பான் மிகவும் பலமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.