நடிகையாகிறாரா ஜெயம் ரவியின் மனைவி? நயன்தாராவையே மிரளவைக்கும் படங்கள்!

125

தமிழ் சினிமாவில் முன்னணி கதா நாயகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் ஜெயம் ரவி. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகுமளவுக்கு ஜெயம் வெற்றி நடை போட்டது. அதனைத்தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், என்று பல படங்களில் அடித்து தூள் கிளப்பினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பருக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமானது. ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஆர்த்தி நடிப்புலகத்துக்கு வருகிறாரா என பலரும் கேள்விகேட்குமளவுக்கு சமீபத்தில் பல்வேறு கவர்ச்சியான படங்களை ஆர்த்தி பகிர்ந்துவருகிறார்.

குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக மாடர்ன் உடைகளில் ஆர்த்தி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளமை பலரையும் அவரது எதிர்கால நகர்வுகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: