• Sep 30 2024

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா: சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி நடவடிக்கை..! இன்று முக்கிய சந்திப்பு samugammedia

Chithra / Oct 2nd 2023, 10:34 am
image

Advertisement

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க தமக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 திகதியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.

நீதவான் இராஜினாமா செய்வதற்குரிய காரணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கையை பகிரங்கப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடமும் கடிதங்களை கையளிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக தீவிர பிரச்சினையை ஏற்படுத்தும் என கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக உடனடி விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.


நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா: சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி நடவடிக்கை. இன்று முக்கிய சந்திப்பு samugammedia  முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க தமக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 23 திகதியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.நீதவான் இராஜினாமா செய்வதற்குரிய காரணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கையை பகிரங்கப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடமும் கடிதங்களை கையளிக்க திட்டமிட்டுள்ளனர்.அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக தீவிர பிரச்சினையை ஏற்படுத்தும் என கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக உடனடி விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement