• Apr 24 2024

கலைகட்டிய மன்னார் பிரதேச கலாச்சார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா!!

crownson / Dec 22nd 2022, 12:16 pm
image

Advertisement

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையில் மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் கலாச்சார பேரவை இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச கலாச்சார விழா  மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது  மன்னார் நகர் பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச  கலாச்சார பேரவையின் தலைவருமான திரு.பிரதீப் தலைமை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடனான சந்திப்பு கலை நிகழ்வு, கலைஞர்கள் கெளரவிப்பு மற்றும் வருட வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் மன்னல் நூலும் வைபவரீதியாக வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி, சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி அன்னை இல்ல பணிப்பாளர் அருட்தந்தை செபமாலை அன்புராச அடிகளார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் வைத்தியர் வினோதன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுடன்  பிரதேச ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் இறுதியில் கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல் மற்றும் பரிசீல்கள் வழங்கப்பட்டதுடன், மன்னார் பிரதேசத்தில் கலைவளர்ச்சிக்கு பங்காற்றிய 5 கலைஞர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

கலைகட்டிய மன்னார் பிரதேச கலாச்சார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையில் மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் கலாச்சார பேரவை இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச கலாச்சார விழா  மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது  மன்னார் நகர் பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச  கலாச்சார பேரவையின் தலைவருமான திரு.பிரதீப் தலைமை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடனான சந்திப்பு கலை நிகழ்வு, கலைஞர்கள் கெளரவிப்பு மற்றும் வருட வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் மன்னல் நூலும் வைபவரீதியாக வெளியீடு செய்துவைக்கப்பட்டது.குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி, சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி அன்னை இல்ல பணிப்பாளர் அருட்தந்தை செபமாலை அன்புராச அடிகளார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் வைத்தியர் வினோதன் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன்  பிரதேச ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வின் இறுதியில் கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல் மற்றும் பரிசீல்கள் வழங்கப்பட்டதுடன், மன்னார் பிரதேசத்தில் கலைவளர்ச்சிக்கு பங்காற்றிய 5 கலைஞர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement