காக்கைதீவில் கண்டல் தாவரங்கள் நாட்டும் நிகழ்வு!

122

கடலின் கரையோரங்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் கண்டல் தாவரங்கள் நாட்டும் நிகழ்வு இன்று யாழ். காக்கைத்தீவு கடற்கரையோரத்தில் நடைபெற்றது.

இந்தப் பகுதியில் கண்டல் தாவரங்கள் இல்லாத இடங்களுக்கு 1000 கண்டல் தாவரங்களை நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், எதிர்கால சுற்றுச்சூழல் கழகத்தின் சமூகநோக்கு செயற்பாட்டாளர் ம.சசிகரன், வலி. தென்மேற்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் சபையின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: