• Apr 19 2024

கரைதுரைப்பற்று பிரதேச சபை வேட்புமனு நிராகரிப்பு - நீதிமன்றை நாடும் தமிழரசுக் கட்சி!

Chithra / Jan 24th 2023, 10:07 am
image

Advertisement

தமிழரசுக் கட்சியின் கரைத்துரைப்பற்று பிரதேச சபை வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

2023 மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான வேட்புமனு ஏற்பு கடந்த 21ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. 

நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர் விண்ணப்பத்தை கையளிக்கவில்லை என்பதே காரணமாக காணப்பட்டது. இருந்தபோதும் ஒரேநாள் 4 சபைகளின் வேட்பு மனுவும் கையளிக்கப்பட்டது. 

இதில் ஏற்பட்ட மாறுபாடுகள் தொடர்பிலும் கையேற்பு முறைமகள் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர் வரும் ஓர் இரு நாட்களில் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் அரசுக் கட்சி மேன் முறையீட்டு நீதிமன்றை நாடவுள்ளதாக தெரியவருகின்றது. 

இதற்காக கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆயராகுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கரைதுரைப்பற்று பிரதேச சபை வேட்புமனு நிராகரிப்பு - நீதிமன்றை நாடும் தமிழரசுக் கட்சி தமிழரசுக் கட்சியின் கரைத்துரைப்பற்று பிரதேச சபை வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2023 மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான வேட்புமனு ஏற்பு கடந்த 21ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர் விண்ணப்பத்தை கையளிக்கவில்லை என்பதே காரணமாக காணப்பட்டது. இருந்தபோதும் ஒரேநாள் 4 சபைகளின் வேட்பு மனுவும் கையளிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட மாறுபாடுகள் தொடர்பிலும் கையேற்பு முறைமகள் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர் வரும் ஓர் இரு நாட்களில் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் அரசுக் கட்சி மேன் முறையீட்டு நீதிமன்றை நாடவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்காக கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆயராகுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement