• Apr 25 2024

உவர்மலை 22ஆவது படைப் பிரிவின் மென்பந்து சுற்றுப் போட்டியில் கிண்ணியா BMSஅணி சம்பியன்!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 11:37 am
image

Advertisement

திருகோணமலை, உவர்மலை 22ம் இராணுவ படைப் பிரிவு ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று தம்பலகாமம் கோயிலடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

குறித்த போட்டியின் இறுதி போட்டி நேற்று (26) மாலை இடம் பெற்றது.

அணிக்கு 11 பேர் கொண்ட இவ் மென்பந்துச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா,தம்பலகாமம்,மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 43 அணிகள் பங்கு பற்றின. 

இதில் கிண்ணியாவை சேர்ந்த BMS மற்றும் Haven leven இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. இறுதி போட்டியில் குறித்த இரு அணிகளும் ஒன்றையொன்று களத்தடுப்பில் எதிர்த்தாடினர்.

இதில் BMS 107 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களைப் பெற்ற நிலையில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.

havel leven அணியினர் 73 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர். இராணுவ படை வீரர்களால் இதன் போது சில சாகச நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்று பிரதம விருந்தினர்கள் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர்.

இறுதிப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 40 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன. 

இறுதிப் போட்டி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராய்ச்சி ,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி உட்பட இரானுவ உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உவர்மலை 22ஆவது படைப் பிரிவின் மென்பந்து சுற்றுப் போட்டியில் கிண்ணியா BMSஅணி சம்பியன்SamugamMedia திருகோணமலை, உவர்மலை 22ம் இராணுவ படைப் பிரிவு ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று தம்பலகாமம் கோயிலடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.குறித்த போட்டியின் இறுதி போட்டி நேற்று (26) மாலை இடம் பெற்றது.அணிக்கு 11 பேர் கொண்ட இவ் மென்பந்துச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா,தம்பலகாமம்,மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 43 அணிகள் பங்கு பற்றின. இதில் கிண்ணியாவை சேர்ந்த BMS மற்றும் Haven leven இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. இறுதி போட்டியில் குறித்த இரு அணிகளும் ஒன்றையொன்று களத்தடுப்பில் எதிர்த்தாடினர். இதில் BMS 107 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களைப் பெற்ற நிலையில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர். havel leven அணியினர் 73 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர். இராணுவ படை வீரர்களால் இதன் போது சில சாகச நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்று பிரதம விருந்தினர்கள் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர்.இறுதிப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 40 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன. இறுதிப் போட்டி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராய்ச்சி ,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி உட்பட இரானுவ உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement