குமார் சங்கக்காரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

255

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.சி யின் Hall of Fame கௌரவத்திற்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெரிவாகியுள்ள 10 பேரும் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இந்த 10 பேர் அடங்கலாக இதுவரை 103 பேர் Hall of Fame கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

1996 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெரும் பங்களிப்பு நல்கிய வீரர்கள் தற்போதைய Hall of Fame பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Hall of Fame கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்கனவே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இம்முறை தெரிவாகியுள்ளோர்,

1. Aubrey Faulkner – South Africa

2. Monty Noble – Australia

3. Sir Learie Constantine – West Indies

4. Stan McCabe – Australia

5. Ted Dexter – England

6. Vinoo Mankad – India 

7. Desmond Haynes West Indies

8. Bob Willis – England 

9. Andy Flower – Zimbabwe

10. Kumar Sangakkara – Sri Lanka

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: