குமுதினி படகுப் படுகொலை; 37ம் ஆண்டு நினைவேந்தல் நாளை!

கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 அன்று நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 37ம் ஆண்டு நினைவுதினம் நாளை ஆகும்.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை குமுதினிப் படகுப் படுகொலையில் உயிரிழந்த மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் மரநடுகையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை