பாராலிம்பிக்- நீளம் தாண்டுதல் போட்டியில் குமுது பிரியங்கா

259

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இன்று இடம்பெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற குமுது பிரியங்கா தோல்வி அடைந்துள்ளார்.

இலங்கை தடகள வீராங்கனை குமுது பிரியங்கா 2020 டோக்கியோ பராஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (31 ஆம் திகதி), பெண்கள் 100 மீ. போட்டியில் டி 47 பிரிவில் ,மகளிர் 100 மீட்டர் நிகழ்வின் ஆரம்ப சுற்றில் பங்கேற்று தனது எட்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

டி 47 பிரிவில் பெண்களுக்கான 100 மீட்டர் போட்டி இரண்டு ஆரம்ப சுற்றுகளைக் கொண்டது. முதல் சுற்றில் விளையாடிய குமுது பிரியங்கா 13.31 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார்.

அதன்படி, குமுது பிரியங்கா இந்த நிகழ்வின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

மகளிர் டி 47 100 மீ போட்டியின் பிரியங்கா பங்கேற்ற ஆரம்ப சுற்றில், 12.14 வினாடிகளில் வெனிசுலாவின் லெசிபில் வேரா முதலிடத்தையும், அமெரிக்கா வீராங்கனை ஜோஜா யாங் 12.26 வினாடிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

இருப்பினும், இந்த ஆண்டு டோக்கியோ பராஒலிம்பிக்கில் குமுது பிரியங்கவிற்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது, அதன்படி அவர் 3 ஆம் தேதி டி 47 பிரிவில் பெண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: