• Dec 01 2022

குருந்தூர்மலை விவகாரம்: ரவிகரனை விடுவிக்கக்கோரி முல்லையில் ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

Sharmi / 2 months ago
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய
விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்று மாலை அழைப்பு விடுத்திருந்தனர்.


இந்நிலையில் காவல் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.


இதனை தொடர்ந்து மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரையும் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.


இதேவேளை காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது முல்லைத்தீவு காவல் நிலையம் முன்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்