• Sep 30 2024

தபாலில் வந்த மூன்றரை இலட்சம் பெறுமதியான குஷ் போதைப்பொருள்! samugammedia

Tamil nila / May 24th 2023, 7:50 pm
image

Advertisement

இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகள் குஷ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

தபால் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட  பொதிகளில் 3 கிலோ 475 கிராம் எடையுடைய "குஷ்" என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மொத்த பெறுமதி 3 கோடியே 47 இலட்சம் ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு சுமார் 10 பொதிகள் தபால் மூலம் அனுப்பப்பட்டன.

பொதிகளை பெற அவற்றின் உரிமையாளர்கள் முன்வராததால், கடந்த 16ம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், இந்த போதைப்பொருள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தபாலில் வந்த மூன்றரை இலட்சம் பெறுமதியான குஷ் போதைப்பொருள் samugammedia இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகள் குஷ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.தபால் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட  பொதிகளில் 3 கிலோ 475 கிராம் எடையுடைய "குஷ்" என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மொத்த பெறுமதி 3 கோடியே 47 இலட்சம் ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு சுமார் 10 பொதிகள் தபால் மூலம் அனுப்பப்பட்டன.பொதிகளை பெற அவற்றின் உரிமையாளர்கள் முன்வராததால், கடந்த 16ம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அந்த சோதனையில், இந்த போதைப்பொருள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement