• Apr 24 2024

மலையக தமிழர்களுக்கு நில உரிமை: பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை கோரிக்கை!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 2:38 pm
image

Advertisement

மலையக மக்களும் இலங்கை பிரஜைகளே எனவும் அவர்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்

யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரனையுடன் நடைபெறும் இலங்கை வாழ் இந்தியர்களின் 200 ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் ஒப்பீட்டு ரீதியில் வளந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் தற்போதும் நிலமற்றவர்களாக இருப்பதுதான் அவர்களின் குறைபாடாக காணப்படுகிறது.

ஆனால், சிங்கள மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர்களில் 90 வீதமான மக்கள் சொந்த நிலங்களை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், இலங்கையில் 200 வருடங்களாக வாழும் மக்களை இந்திய தமிழர்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் அவர்களை மலையக தமிழர்கள் என்றே அழைக்க வேண்டும் எனவும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்

மலையக தமிழர்களுக்கு நில உரிமை: பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை கோரிக்கைSamugamMedia மலையக மக்களும் இலங்கை பிரஜைகளே எனவும் அவர்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரனையுடன் நடைபெறும் இலங்கை வாழ் இந்தியர்களின் 200 ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.மலையக மக்கள் ஒப்பீட்டு ரீதியில் வளந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் தற்போதும் நிலமற்றவர்களாக இருப்பதுதான் அவர்களின் குறைபாடாக காணப்படுகிறது.ஆனால், சிங்கள மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர்களில் 90 வீதமான மக்கள் சொந்த நிலங்களை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  அத்துடன், இலங்கையில் 200 வருடங்களாக வாழும் மக்களை இந்திய தமிழர்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் அவர்களை மலையக தமிழர்கள் என்றே அழைக்க வேண்டும் எனவும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement