மனித உரிமைகள் திரைப்பட விழாவில் ‘நிலம்’ குறும்படம்

78

அமெரிக்காவில் இடம்பெறுகின்ற morehousehumanrightsfilmfestival மனித உரிமைகள்
திரைப்படவிழாவில், தாயகத்தில் உருவான ‘நிலம்’ குறும்படம் தேர்வாகியுள்ளது.

அபகரிப்புக்கு உள்ளாகியுள்ள தனது சொந்தக்காணியில், தனது உயிர்பிரிய வேண்டும் என ஏங்கும்
ஓர் முதியவரின் இறுதிநாட்களை கதைக்கருவாக கொண்டே இக்குறும்படம் உருவாகியுள்ளது.

இக்குறும்படம் கதிர் இயக்கத்தில் உருவாகி சுதன்ராஜ் அவர்கள் எழுதி தயாரித்துள்ளார்.

இக் குறும்படம், மனித உரிமைகளுக்கான கொழும்பு திரைப்பட விழா, இந்தியாவில் இடம்பெறுகின்ற பனறாமிக் திரைப்பட
விழாக்களில் பங்கெடுத்துள்ளது.

Amnestyinternational நடத்துகின்ற 2021ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான திரைப்படப்
போட்டியிலும் பங்கெடுக்கின்றது.

மேலும், எதிர்வரும் 23 ஆம் திகதி அழசநாழரளநாரஅயசெiபாவளகடைஅகநளவiஎயட திரைப்பட விழாவில் மெய்நிகர் வழியாக இக் குறும்படம் திரையிடப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: