இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

120

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையால் 02 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் நாட்டின் சில கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: