லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டது

252

ஜுலை 29 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த 2021 லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை லங்கா பிரீமியர் லீக் தொடர் மீள திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை லங்கா பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடரில் விளையாடுவதற்காக பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவௌ அரங்கில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: