• Apr 20 2024

தோல் புற்றுநோயை குணமாக்கும் லேசர் சிகிச்சை!

Tamil nila / Jan 20th 2023, 6:44 pm
image

Advertisement

பொதுவாக புற்றுநோய் என்றாலே மிகவும் அச்சத்திலும், ஆழ்ந்த மன அழுத்தத்துக்கும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாகும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 


தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிய லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெலனோமா அல்லாத புற்றுநோயை எளிய லேசர் சிகிச்சை வழியாகவே குணப்படுத்திவிட முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் கூறியுள்ளனர். 


இந்த புதிய ஆராய்ச்சியின் படி, சருமத்திற்கு நேரடியான லேசர் சிகிச்சைகள் கொடுத்து மெலனோமா அல்லாத புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கலாம். பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா ஆகியவை இணைந்து கெரடினோசைட் கார்சினோமா என்று அழைக்கப்படுகின்றன. இவை அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களாகும். 


தோலுக்கான எளிய லேசர் சிகிச்சைகள், பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று புதிய இந்த புதிய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. 


மாஸ் ஜெனரல் ப்ரிகாமின் நிறுவன உறுப்பினரான மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெர்மட்டாலஜிக் சர்ஜரி என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இது தனிநபர்களின் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான எளிதான நடைமுறை உத்தியை வெளிப்படுத்துகிறது.


அதில் Nonablative fractional lass (NAFL)  வெப்பத்தை ஒரு பகுதியளவில் வழங்குகின்றன. இது சிகிச்சையின் பின்னர் முழுமையாக அப்படியே இருக்கும் (தோலின் மேல் அடுக்கை அகற்றும்ablative fractional lasers  போலல்லாமல்). மேலும் அவை தற்போது வடுக்கள்  சூரியனால் சேதமடைந்த தோல்  வயது புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும்  தோல் சேதத்தைத் தடுப்பதில் அவற்றின் செயல்திறன் தெரியவில்லை.


தோல் புற்றுநோயை குணமாக்கும் லேசர் சிகிச்சை பொதுவாக புற்றுநோய் என்றாலே மிகவும் அச்சத்திலும், ஆழ்ந்த மன அழுத்தத்துக்கும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாகும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிய லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெலனோமா அல்லாத புற்றுநோயை எளிய லேசர் சிகிச்சை வழியாகவே குணப்படுத்திவிட முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் கூறியுள்ளனர். இந்த புதிய ஆராய்ச்சியின் படி, சருமத்திற்கு நேரடியான லேசர் சிகிச்சைகள் கொடுத்து மெலனோமா அல்லாத புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கலாம். பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா ஆகியவை இணைந்து கெரடினோசைட் கார்சினோமா என்று அழைக்கப்படுகின்றன. இவை அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களாகும். தோலுக்கான எளிய லேசர் சிகிச்சைகள், பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று புதிய இந்த புதிய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. மாஸ் ஜெனரல் ப்ரிகாமின் நிறுவன உறுப்பினரான மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெர்மட்டாலஜிக் சர்ஜரி என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இது தனிநபர்களின் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான எளிதான நடைமுறை உத்தியை வெளிப்படுத்துகிறது.அதில் Nonablative fractional lass (NAFL)  வெப்பத்தை ஒரு பகுதியளவில் வழங்குகின்றன. இது சிகிச்சையின் பின்னர் முழுமையாக அப்படியே இருக்கும் (தோலின் மேல் அடுக்கை அகற்றும்ablative fractional lasers  போலல்லாமல்). மேலும் அவை தற்போது வடுக்கள்  சூரியனால் சேதமடைந்த தோல்  வயது புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும்  தோல் சேதத்தைத் தடுப்பதில் அவற்றின் செயல்திறன் தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement