Tuesday, June 28, 2022

திருமணத்திற்கு தயாராகும் முன்னணி நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் இனைந்து பல்வேறு வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு எடுத்துவந்த பெருமை திரிஷாவை சாரும்.

இந்நிலையில் தமிழ் திரை உலகில் வெற்றிகரமான நடிகையாக உலா வந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்டவர் . தற்போது தன்னுடைய தாயாரின் வேண்டுகோளை ஏற்று திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதேவேளை 40 வயதை நெருங்கும் திரிஷா சொந்த வாழ்க்கையிலும் , கலையுலக வாழ்க்கையிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அண்மையில் சோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் மதுரை மீனாட்சி அம்மனை வரிசையில் நின்று தரிசனம் செய்திருக்கிறார் .

அத்துடன் நடிகை திரிஷா நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் திகதியன்று ‘ பொன்னியின் செல்வன் ‘ திரைப்படம் வெளியாகவிருக்கிறது . அதேவேளை அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் ‘ படத்தில் தற்போது முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் திரிஷா திருமணம் செய்துகொள்வார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை