• Sep 29 2024

தேசிய பூங்காவிற்கு பெருந்தொகை வருவாயை ஈட்டித்தந்த சிறுத்தைகள்..! வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 16th 2023, 1:51 pm
image

Advertisement

 

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான குமண தேசிய பூங்காவானது 4 வருடங்களின் பின்னர் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு, கொவிட் அச்சுறுத்தல் மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவற்றால் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், வருமான வரவு மீண்டும் சரிந்தது.

எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பியதன் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளதாகவும் பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதன்படி, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், கிட்டத்தட்ட 12,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், மேலும் டிக்கெட் விற்பனை மூலம் 40 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக பூங்கா காப்பாளர் டி.பி. சமரநாயக்க குறிப்பிடுகின்றார்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பூங்காவில் 63 சிறுத்தைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் புலிகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தேசிய பூங்காவிற்கு பெருந்தொகை வருவாயை ஈட்டித்தந்த சிறுத்தைகள். வெளியான தகவல் samugammedia  வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான குமண தேசிய பூங்காவானது 4 வருடங்களின் பின்னர் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஈஸ்டர் குண்டுவெடிப்பு, கொவிட் அச்சுறுத்தல் மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவற்றால் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், வருமான வரவு மீண்டும் சரிந்தது.எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பியதன் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளதாகவும் பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், கிட்டத்தட்ட 12,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், மேலும் டிக்கெட் விற்பனை மூலம் 40 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக பூங்கா காப்பாளர் டி.பி. சமரநாயக்க குறிப்பிடுகின்றார்.ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில் 63 சிறுத்தைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் புலிகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement