• Apr 19 2024

இறுதி வரை விறுவிறுப்பு; இலங்கை அணி அபார வெற்றி!

Sharmi / Jan 6th 2023, 12:08 am
image

Advertisement

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றுள்ளது

பூனேவில் இடம்பெறும் இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் ஷானக்க 56 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களையும், சரித் அசலங்க 37 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணியின் உம்ரான் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், அக்ஷர் படேல் 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 12 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,இந்திய அணி 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் வேகமாக விக்கெட்டுக்களை இழந்தாலும் இறுதியில் நிதானமாக விளையாடியது.

எனினும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதி வரை விறுவிறுப்பு; இலங்கை அணி அபார வெற்றி சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றுள்ளதுபூனேவில் இடம்பெறும் இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் ஷானக்க 56 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களையும், சரித் அசலங்க 37 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில், இந்திய அணியின் உம்ரான் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், அக்ஷர் படேல் 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 12 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில்,இந்திய அணி 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது.இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் வேகமாக விக்கெட்டுக்களை இழந்தாலும் இறுதியில் நிதானமாக விளையாடியது.எனினும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement