லொஸ்லியா இலங்கை வந்ததும் கட்டாயம் செய்ய வேண்டியது; மரியநேசனின் இறுதிச்சடங்கு எப்போது? வெளியாகும் தகவல்!

1559

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை அவர்கள் சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை தமிழகத்திலிருக்கும் லொஸ்லியாவும் திருகோணமலைக்கு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் கிட்டத்தட்ட அந்த ஏற்பாடுகளும் பூர்த்தியாகவுள்ளது.

இந்நிலையில் மரியநேசனின் சடலம் இலங்கை வந்ததும் சுகாதார நடைமுறைகளுடன் பிரிஸரில் வைக்கப்படும், லொஸ்லியா மற்றும் அவருடன் எவரும் இந்தியாவிலுருந்து இலங்கை வந்தால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா இல்லையென சான்றிதழ் பெற்றபின்னரே இலங்கையில் வெளியில் நடமாடமுடியும்.

இந்த நடைமுறைகளை முடித்து மரியநேசனின் இறுதி சடங்குகள் திருகோணமலையில் இடம்பெற கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகுமென அறியமுடிகிறது.