• Apr 24 2024

இலங்கை கரையை இன்று கடக்கும் தாழமுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Feb 1st 2023, 7:14 am
image

Advertisement

தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ​நேற்று வடஅகலாங்கு 8.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.70 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு கிழக்காக 340 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.

அது மேற்குத் திசையில் நகர்ந்து அதன் பின் படிப்படியாக மேற்கு - தென்மேற்குத் திசைக்குத் திரும்பி 2023 பெப்ரவரி 1 ஆம் திகதி நண்பகல் வடஅகலாங்கு 70 N இற்கும் 80 N இற்கும் இடையில் இலங்கையின் கரையைக் கடக்கக் சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை கரையை இன்று கடக்கும் தாழமுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ​நேற்று வடஅகலாங்கு 8.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.70 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு கிழக்காக 340 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.அது மேற்குத் திசையில் நகர்ந்து அதன் பின் படிப்படியாக மேற்கு - தென்மேற்குத் திசைக்குத் திரும்பி 2023 பெப்ரவரி 1 ஆம் திகதி நண்பகல் வடஅகலாங்கு 70 N இற்கும் 80 N இற்கும் இடையில் இலங்கையின் கரையைக் கடக்கக் சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement