பார்த்த உடன் மாயமாகும்… ‘வாட்ஸ் அப்’பின் அசர வைக்கும் அறிவிப்பு; உறுதிப்படுத்தினார் உரிமையாளர்!

1433

உலகளவில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள பயனாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் (WhatsApp) செயலி தான்.

வீடியோ, வாய்ஸ், text chat-களுக்கு வாட்ஸ் அப் செயலி பெருமளவில் உதவி வருகிறது. தனி நபருக்குள்ளும், குழுவிலும் இதில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள முடியும், இந்நிலையில், வரும் நாட்களில் வாட்ஸ் அப்பில் புதிதாக சில அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி அதிகபட்சம் ஒரு வாட்ஸ் அப் கணக்கை நான்கு சாதனங்களில் (Device) பயன்படுத்தலாம் என தெரிவித்திருக்கிறார்கள், அதே போல நாம் அடுத்தவர்களுக்கு அனுப்பும் செய்திகளை அவர்கள் ஒரு முறை பார்த்ததும் தானாகவே மறைந்து போகும் வகையில் View Once என்ற அம்சம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல Disappearing Mode என்ற வசதியும் விரைவில் வர உள்ளது. அதன் மூலம் chat thread-களில் உள்ள மெசேஜ்களை தானாகவே அழிக்கவும் முடியும் எனத் தெரியவருகிறது. இந்த தகவலை வாட்ஸ் அப் சர்வதேச தலைவர் Will Cathcart தெரிவித்துள்ளதார். வாட்ஸ் அப்பின் உரிமையாளரான Mark Zuckerberg இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: