மரணத்தை மனிதர்களிடம் நெருங்கவிடாத இலுப்பை எண்ணெய்!

165

இலுப்பை எண்ணெய் என்பது தமிழர்கள் மரபு ரீதியாக பயன்படுத்திவரும் ஒரு அற்புத மருந்தாகும்.

மனித உடலில் நம்பமுடியாத அற்புதங்களை நிகழச்செய்யும் அபூர்வ சக்தி இலுப்பை எண்ணெய்க்கு இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த பாரம்பரியமிக்க எண்ணெயின் அற்புத மருத்துவ குணங்களைப் பார்ப்போம்,

இலுப்பை எண்ணெயால் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி இவை நீங்கும் நரம்புகளை வலுவாக்கும்.

இதை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர ஆறும்.

நெருப்பனலில் இந்த எண்ணெயைச் சற்றேத் தாளக்கூடியவாறுச் சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய உபத்திரவங்களுக்கு அவ்விடங்களில் நன்றாகத் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்.

பக்கவாதம் கை கால் இழுப்புபோன்றவற்றிற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம் குணமாகும். இலுப்பை எண்ணெயில் தொடர்ந்து விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் அனைத்தும் சுகமாக நடக்கும்

முதுகு தண்டுவட பாதிப்பு இடுப்பு கை கால் மூட்டு வலி அனைத்தும் குணமடையும்

இலுப்பை புண்ணாக்கு உடலுக்குத் தேய்த்து வர நோய்கள் நரம்பு சுற்றல் முகப்பரு போன்றவை அனைத்தும் குணமடையும்

இலுப்பை இலை மற்றும் பூ இவற்றை தாய்மார்கள் மார்பகத்தில் கட்டி வர நன்றாக பால் சுரக்கும்

காச நோய்க்கு ஒரு அருமருந்தாகும் நீரழிவு நோய்க்கு அற்புதமான மருந்து இலுப்பை மரப்பட்டை அரைத்து பொடி செய்து கசாயம் செய்து குடிக்க வேண்டும்

ஆறாத புண்கள் குதிகால் வெடிப்பு விரல்களுக்கு இடையே ஏற்படக்கூடிய ஈரத்தினால் சேற்றுப்புண் அனைத்தும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்த குணமடையும்

உடல்முழுதும் தேய்த்து எண்ணெய் குளித்தால் கண் தெளிவு படும் செரிமான கோளாறு சரியாகும் உடல் குளிர்ச்சி பெறும் மண்டை கிறுக்கு சரியாகும்