உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை குறித்து மௌனம் காக்கும் மைத்திரி!

47

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்விதமானக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

மேலும் இந்த விடயம் குறித்து அறிய ஆங்கில ஊடகமொன்று அவரை தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில், இந்த நேரத்தில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: