ஜனாதிபதியை நான் உசுப்பேற்றவில்லை! மஹிந்தானந்த

151

ஜனாதிபதியை உசுப்பேற்றம் வகையில் நான் எதனையும் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சபையில் பொய்களை கூறி வருகிறார். முன்னாள் ஜனாதிபதி என்றவகையில் பொய்களை கூறுவது நல்லதல்ல என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் சபையில் இல்லாபோது என்னை பற்றி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கீழ்த்தரமாக கூறியிருக்கிறார்.


ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பில் நான் தனிப்பட்ட எவரையும் குற்றம்சுமத்தவில்லை.

2019ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் ஒதுக்கியிருக்கும் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது செலவீனங்களுக்கு இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதாக எனது உரையில் கூறியிருந்தேன்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டுக்கு செய்திருக்கும் முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு இருக்கிறது. 

யாரையும் தனிப்பட்ட வகையில் தாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் அடித்தால் நாமும் திருப்பியடிப்போம். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. 

எனது உருவ பொம்மை, எனது முகத்தை எரித்தாலும், நான் அடுத்த தேர்தலில் தோற்று வீட்டுக்கு சென்றாலும் நான் எடுத்தத் தீர்மானங்களில் உறுதியாக இருப்பேன்.

நான் கூறும் கருத்துக்களில் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டினால் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

எமது சிலிண்டர்கள் தரமானவை! குற்றச்சாட்டை மறுக்கிறது லிட்ரோ

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: