ஆளை மயக்கும் வாசனைத் திரவியங்கள் இதன் பின்பக்கத்திலிருந்துதான் வருகிறதாம்!

180

புனுகு பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது.

காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை “புனுகு” என்பார்கள்.

இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது. புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள்.

ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது “சீவெட் காபி” (Civet coffee) என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும். இதனால் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்தேனிஸியா போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.மகிழ்வித்து மகிழுங்கள். ஆரோக்கியம் இது அரிதான பொருள் என்பதால் கிடைப்பதும் கஷ்டம். விலையும் சற்று அதிகம் தான்.