• Apr 20 2024

யாழில் கடல் ஆமையுடன் கைதான நபருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 11:15 am
image

Advertisement

வேலணை - சாட்டிப் பகுதியில் கடல் ஆமை ஒன்றை இறைச்சிக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கடல் ஆமையும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை எடுத் துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 

அத்துடன் ஊர்காவற்றுறைப் பொலிஸா ரால் மீட்கப்பட்ட கடல் ஆமையை வனஜீவ ராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் கடலில் விடுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் கடல் ஆமையுடன் கைதான நபருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் SamugamMedia வேலணை - சாட்டிப் பகுதியில் கடல் ஆமை ஒன்றை இறைச்சிக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து கடல் ஆமையும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை எடுத் துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் ஊர்காவற்றுறைப் பொலிஸா ரால் மீட்கப்பட்ட கடல் ஆமையை வனஜீவ ராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் கடலில் விடுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement