• Mar 29 2024

மானிப்பாய் பொலிசாரால், வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 10:13 pm
image

Advertisement

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருவாள்களுடன் ஐந்து சந்தேக நபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது 


இது குறித்து அவர் மேலும் தெரிய வருவதாவது..


மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த  வயதான இருவரை கைது செய்திருந்தனர்.


இந்நிலையில் குறித்த இருவரிடம்  முன்னெடுத்த விசாரணைகளின் போது சுடலையொன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த   இரண்டு வாள்  மானிப்பாய் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தது.


மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த கம்மாலை உரிமையாளர் ஒருவரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.


இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு  உதவி புரிந்த   இளைஞர் ஒருவரையும்  வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட  ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் மானிப்பாய் பொலிசார் இன்றைய தினம் கைது செய்தனர்.


அத்தோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்  கைப்பற்றியுள்ள நிலையில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மானிப்பாய் பொலிசாரால், வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைதுSamugamMedia மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருவாள்களுடன் ஐந்து சந்தேக நபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இது குறித்து அவர் மேலும் தெரிய வருவதாவது.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த  வயதான இருவரை கைது செய்திருந்தனர்.இந்நிலையில் குறித்த இருவரிடம்  முன்னெடுத்த விசாரணைகளின் போது சுடலையொன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த   இரண்டு வாள்  மானிப்பாய் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தது.மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த கம்மாலை உரிமையாளர் ஒருவரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு  உதவி புரிந்த   இளைஞர் ஒருவரையும்  வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட  ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் மானிப்பாய் பொலிசார் இன்றைய தினம் கைது செய்தனர்.அத்தோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்  கைப்பற்றியுள்ள நிலையில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement