சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்த மான்னப்பெரும!

112

ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு, அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார்.

அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததை அடுத்து அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சியில் இருந்து கம்பஹா மாவட்டத்திற்காக போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமஇ கம்பஹா தேர்தலில் 47,212 விருப்பு வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: