மனோவை முட்டாள் என்று திட்டிய விமல்; நாடாளுமன்றில் நடந்த அமளி!!

277

விமல் வீரவன்சவுக்கு இது கெட்ட காலம் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சாடியுள்ளார்.

மேலும் தன்னை ஒரு அடிமுட்டாள் என்று கூறிய இந்த அடிமுட்டாளுக்கு, யார் முட்டாள் என்பதை அடுத்த வாரம் பாராளுமன்றில் தான் காட்டப்போவதாகவும் மனோ கணேசன் உறுதியளித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 2ஆம் வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு கட்சிகள் சார்பிலும் காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கொரோனா நிலைமையால் ஏற்பட்ட தொடர் முடக்கங்களால் வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பு மக்கள் சந்தித்துவரும் பல்வேறுபட்ட பொருளாதார இன்னல்கள் தொடர்பில் மனோ கணேசன் கருத்துத்தெரிவித்திருந்தார்.

இதன்போது அரசாங்கம் வெறும் 5000 ரூபாவை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச, 5000 ரூபாவை மக்களுக்கு கொடுத்தமையானது ஒரு வாரத்தில் சாப்பிட்டு முடிக்க இல்லை என கூறியுள்ளார்.

அது இரண்டு வார காலத்திற்கு சேர்த்தே வழங்கப்பட்டது என்றார் விமல். இதுபற்றிய தெளிவில்லாமல் முட்டாள்போல மனோ கணேசன் பேசுவதாக விமல் குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும் சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பம், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு எனில், 14 நாட்களில், 168 வேளை சாப்பிட வேண்டும் என்றும் இதை 5000 ரூபாயில் சமாளிப்பது கடினமானது என்றும் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.