மேற்கு ஜேர்மனியில் ஆசென் நகரில் புகையிரத பயணத்தின் போது கத்தி தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் காயமடைந்த 6 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த மாநில அமைச்சர் ஹெர்பர்ட் ரியுல்,
மேற்படி சம்பவம் நகரில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாக்குதலை நடாத்திய நபர் 31 வயதான ஈராக்கில் பிறந்து ஜேர்மனிக்கு குடிபெயர்ந்தவர் என்பதுடன் ஜேர்மனியில் இவர் வாழ்வதற்கான சட்ட உரிமை இன்னும் வழங்கப்படாத நிலையிலேயே மேற்படி கண்மூடித்தனமான கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்பதுடன் பயணிகள் மேல் கத்தியினால் தாக்குதலை மேற்கொண்டு பின்னர் தன்னையும் கத்தியினால் தாக்கிக் கொண்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட நபரினால் ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக நகரில் 200 ற்கும் மேற்பட்ட படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரணிலுக்கு ஆதரவு: தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு
- ரணிலின் காலை இழுக்க மாட்டோம்- மனோ உறுதி!
- மலையக தொடருந்து சேவைகள் தாமதம்!
- ஒரு பில்லியன் நட்டஈடு கோரிய ஜோன்ஸ்டன்!
- பிரதமரின் வீடும் பொதுமக்களால் முற்றுகை!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்