• Apr 20 2024

தமிழ் எம்.பிக்கள் உடனடியாக கிராஞ்சி மீனவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டும்

harsha / Dec 4th 2022, 9:15 pm
image

Advertisement

தமிழ் எம்.பிக்கள் உடனடியாக கிராஞ்சி மீனவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டும் என  
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் மதியளகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராஞ்சியில் அட்டைப் பண்ணை பிரச்சினை இப்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.மீனவர்களுக்கு எங்கு பிரச்சினை நடந்தாலும் ,ஒரு சமூகமாக நாம் குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.

இந்த அட்டை பண்ணையால் பலர் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.இதனை நாம் தெரிவு செய்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கதைப்பதற்கு தயாராக இல்லை.உங்களை நம்பி தானே நாம் எமக்கு வாக்குகளை வழங்கினோம்.ஆனால் நீங்கள் கடல் தொழிலாளர்களை ஒதுக்குகின்றீர்கள்.

இனி தேர்தல் காலம் வந்தால் மீண்டும் அவர்கள் வருவார்கள்.ஆகவே நீங்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க முன்வாருங்கள்.இல்லையென்றால் இனி வரும் காலங்களில் எம்மில் இருந்து யாரும் ஒருவரை அங்கு அனுப்பவேண்டி வரும்.ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்புக்களும் இந்த மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்.

தமிழ் எம்.பிக்கள் உடனடியாக கிராஞ்சி மீனவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டும் தமிழ் எம்.பிக்கள் உடனடியாக கிராஞ்சி மீனவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டும் என  வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் மதியளகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிராஞ்சியில் அட்டைப் பண்ணை பிரச்சினை இப்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.மீனவர்களுக்கு எங்கு பிரச்சினை நடந்தாலும் ,ஒரு சமூகமாக நாம் குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.இந்த அட்டை பண்ணையால் பலர் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.இதனை நாம் தெரிவு செய்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கதைப்பதற்கு தயாராக இல்லை.உங்களை நம்பி தானே நாம் எமக்கு வாக்குகளை வழங்கினோம்.ஆனால் நீங்கள் கடல் தொழிலாளர்களை ஒதுக்குகின்றீர்கள்.இனி தேர்தல் காலம் வந்தால் மீண்டும் அவர்கள் வருவார்கள்.ஆகவே நீங்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க முன்வாருங்கள்.இல்லையென்றால் இனி வரும் காலங்களில் எம்மில் இருந்து யாரும் ஒருவரை அங்கு அனுப்பவேண்டி வரும்.ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்புக்களும் இந்த மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement