• Dec 01 2022

கொழும்பில் பாரிய தீ பரவல் : 12 தீயணைப்பு இயந்திரங்கள் களத்தில்!

Tamil nila / 2 months ago
image

கொழும்பு - பாலத்துறை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை தொடர்மாடிப் பகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்