• Sep 30 2024

சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் கணிதக் கண்காட்சி நிகழ்வு! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 2:39 pm
image

Advertisement

சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் இன்று கணித கல்விக்கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. கல்வி நிலையத்தின் இயக்குனர் இ.பிரதீப் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெற்றது.

இன்று காலை்9.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மதியம் வரை இடம்பெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள்  நாடா வெட்டி கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.



இக்கணித கல்விக் கண்காட்சியில் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவற்றிற்கான விளக்கங்களும் மாணவர்களால் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இக்கண்காட்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தனியார் கல்வி நிலையங்களில் பெரும்பாலும் இவ்வாறான இணை பாடவிதான செயற்பாடுகள் மிக குறைவாக இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களின் இச்செயற்பாடு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் கணிதக் கண்காட்சி நிகழ்வு samugammedia சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் இன்று கணித கல்விக்கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. கல்வி நிலையத்தின் இயக்குனர் இ.பிரதீப் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெற்றது.இன்று காலை்9.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மதியம் வரை இடம்பெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள்  நாடா வெட்டி கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.இக்கணித கல்விக் கண்காட்சியில் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவற்றிற்கான விளக்கங்களும் மாணவர்களால் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.இக்கண்காட்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.தனியார் கல்வி நிலையங்களில் பெரும்பாலும் இவ்வாறான இணை பாடவிதான செயற்பாடுகள் மிக குறைவாக இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களின் இச்செயற்பாடு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement