வாழையின், அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது.வாழைத்தண்டு நமது உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை தீர்க்க வல்லது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை.
வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லை நீக்குகிறது. குறிப்பாக சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லை வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இப்போது வெயில் காலம் பிறந்துவிட்டது அடிக்கடி உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு கொப்புளங்கள், கட்டிகள் போன்றவைகள் நம் உடலில் பரவும். சிலருக்கு சரும பிரச்சனைகள் அதீத தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.இத்தகைய உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை தீர்க்க வல்லது தான் இந்த வாழைத்தண்டு.இந்த வாழைத்தண்டை ஜூஸ் போட்டு அருந்தலாம் அல்லது சூப் வைத்து சாப்பிட்டு மகிழலாம். இயல்பிலேயே நார்ச்சத்து நிறைந்த இந்த வாழைத்தண்டு நம் உடலின் தட்ப வெப்பத்தை நன்றாக பாதுகாக்கும்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.
பிற செய்திகள்
- பொருட்களின் விலைகளை குறைக்க களமிறங்கினார் ரணில்
- அமெரிக்க டொலரின் மதிப்பு சரிந்தது!
- வட கொரியாவை உலுக்கிய தொற்று நோயாளியின் மரணம்
- இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடு!
- பதவிப்பிரமாணம் செய்யவுள்ள இரு அமைச்சர்கள்!
- ரணிலுக்கு ஆதரவு வழங்குவதா? அவசரமாக கூடுகிறது சஜித் அணி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்